Mnadu News

தெலுங்கானாவில் கனமழை! பலர் பலி! மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி!

தெலங்கானா மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 12 க்கும் மேற்பட்ட இடங்களில் 23 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. லட்சுமிதேவிபேட்டா (முலுகு மாவட்டம்) மற்றும் சிட்யாலில் (ஜெயசங்கர் பூபாலப்பள்ளி) முறையே 64.98 செ.மீ மற்றும் 61.65 செ.மீ. மழை பதிவானது.

மேலும், முலுகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கொட்டிய மழையால் அங்குள்ள ஒரு கிராமம் வெள்ளக்காடானது. இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த 12 பேர் பாதுகாப்பான இடம் தேடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 4 பேர் தப்பிய நிலையில், 8 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தேகிக்கபடுகிறது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் 27 தற்காலிக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 3 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

Share this post with your friends