கன்னியாகுமரி;
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற 33 வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42 வது சமய வகுப்பு மாணவர் மாநாட்டில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பாஜக அரசு ஹிந்தி மொழியை திணிக்கவில்லை. ஹிந்தி மொழி அதிகம் பேசும் மத்திய பிரதேசத்தில் தாய் மொழி வழி மருத்துவ கல்வி முறையை கொண்டு வந்திருக்கின்றனர். இத்தனை வருடம் ஆட்சி செய்து என்ன செய்தீங்க என்று கேள்வி எழுப்பிய அவர் ஏன் தமிழ் வழியில் ஒரு புத்தகம் கொண்டு வரமுடியாதா ?தமிழ் வழியில் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.