தன்னுடைய தனித்த திரை மொழியால் இந்திய அளவில் உள்ள கலை ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் இவை இரண்டுமே மாரி செல்வராஜை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சென்று உள்ளது. அதாவது மோஸ்ட் வான்டட் இயக்குநர் என்கிற அடையாளத்தை கொடுத்து உள்ளது.
இந்த நிலையில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் சென்ற மாத இறுதியில் வெளியாகி தற்போது வரை வசூலில் சக்கை போடு போட்டு வரும் படம் “மாமன்னன்”. ஆம், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற முக்கிய நடிகர்களை படத்தில் தரமான கதாபாத்திரங்களை கொடுத்து திரையில் மின்ன வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.
குறிப்பாக, வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸ் இந்த படத்தில் இருந்து தான் துவங்கப்பட்டு உள்ளது. தமிழில் இப்படம் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் என அனைவரின் பாராட்டையும் அள்ளி தற்போது வரை ₹80 கோடிகள் வரை வசூலை அள்ளி உள்ளது. இந்த நிலையில் மாமன்னன் படத்தை தெலுங்கில் வெளியிட பிளான் செய்த படக்குழு அதை தற்போது வெளியிட்டு உள்ளது. ஆம், “நாயகடு” என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டு உள்ளது. தெலுங்கில் முன்னனி நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன் மற்றும் ஏசியன் மல்டிபிளக்ஸ் இணைந்து தெலுங்கு பதிப்பை வெளியிட்டது. ஆனால், ‘நாயகடு’ திரைப்படம் தெலுங்கில் தோல்விப்படமாக அமைந்துள்ளது.
ஒரு நேரடி தெலுங்கு படமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள “மாவீரடு” படமும் தற்போது ஓடி வருவதால், நாயகடு படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் தோல்வியை சந்தித்து உள்ளது. மாமன்னன் வரும் 27 அன்று நெட் பிளிக்ஸ் ஒ டி டி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.