யோகி பாபு தான் தற்போது பிஸியாக வலம் வரும் நடிகர். ஹீரோ, காமெடியன், குணச்சித்திரம் என அவர் அனைத்து விதமான ரோல்களையும் ஏற்று வெற்றிகரமான ஒருவராக உலா வருகிறார்.
மொழிகளை கடந்து நடித்து வரும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இன்னும் பல வருடங்களுக்கு அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஒரு நாளைக்கு ₹10 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார். ஆனால், சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்றால் கருணை காட்டி தமது சம்பளத்தை குறைத்து வாங்குகிறார்.
தற்போது, யோகி பாபுவுக்கு தெலுங்கு படத்தில் காமெடி ரோலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், மாளவிகா ஹீரோயின் ஆகவும் நடிக்கின்றனர். இதற்காக யோகி பாபுவுக்கு பல கோடிகள் சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.