டெல்லியின் வடக்கு பகுதியில் டிலா என்ற இடத்தில் திபெத்திய அகதிகளுக்கான காலனி உள்ளது. டெல்லி பல்கலை அருகேயுள்ள இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவார்கள். இந்த பகுதியில் புத்த மத துறவி போல் காணப்பட்ட பெண்ணை பிடித்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர்.
அப்போது அவர், தனது பெயர் டோல்மா லாமா எனக்கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அதே பெயரில் நேபாள குடியுரிமை சான்றிதழ் அவரிடம் இருந்தது. பின்னர் அதை பறிமுதல் செய்த போலீசார், அவரை வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, அந்த பெண் சீனாவின் ஹைனன் மாகாணத்தை சேர்ந்த கெயி ரூயோ என்பதும், கடந்த 2019 ஆம் ஆண்டு சுற்றுலாவில் இந்தியா வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More