உளவாளி கதையம்சம் கொண்ட படங்கள் பெரும்பாலும் நம்மை ஈர்க்கவே செய்யும். ஆனால், அதில் கொஞ்சம் தவறினால் கூட படம் சொதப்பலாகி விடும். ஜேம்ஸ் பாண்ட் உளவு கதைகளை பார்த்த நமக்கு அபப்டி ஒரு நிகரான படைப்பை உருவாக்கியுள்ளது “சர்தார்” படக்குழு.
இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். சிம்ரன் ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
தேசிய உளவாளி ரோலை ஏற்று நடித்துள்ளார் கார்த்தி. நேற்று வெளியான டிரெய்லர் அனைவரையும் கவர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 21 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது.
டிரெய்லர் லிங்க் : https://youtu.be/8OQzz_i3KFE