கர்நாடக மாநிலம் மட்பித்ரி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியுள்ள பிரதமர் மோடி, கர்நாடகாவை முன்னேற்றி, உற்பத்தி மையமாக மாற்றுவதே பா.ஜ.,வின் லட்சியம். ஆனால், பா.ஜ., இயற்றிய சட்டங்கள் மற்றும் விதிகளை மாற்றுவதற்காக காங்கிரஸ் வாக்குகளை கேட்கிறது. தேச விரோதிகளுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், தேர்தலுக்கு இந்திய எதிர்ப்பு சக்திகளின் உதவியை நாடுகிறது. இதற்கு பிரதிபலனாக, தேச விரோதிகள் மீதான வழக்குகளை அக்கட்சி திரும்ப பெறும். பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்களாகவும் அக்கட்சி உள்ளது. நமது ராணுவத்தையும், வீரர்களையும் விமர்சனம் செய்த கட்சி காங்கிரஸ். ,கர்நாடகாவில் நிலையற்ற தன்மை வந்தால், உங்களது வாழ்க்கையும் நிலையற்றதாக மாறிவிடும். முழு பெரும்பான்மையுடன் பா.ஜ.க,ஆட்சி அமைக்கும் என்று பேசி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More