Mnadu News

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்:-

கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேர்வு கட்டணமாக தாள் ஒன்றுக்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் செமஸ்டர் முதல் தாள் ஒன்றுக்கு 125 ரூபாய் என்று தேர்வு கட்டணம் அதிகரித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவ மாணவிகள் இதனால் பருவம் ஒன்றுக்கு சுமார் 500 ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென்று தேர்வு கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து நாகப்பட்டினம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணங்களை குறைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

Share this post with your friends