Mnadu News

தேவையற்ற முடியை அகற்ற

தேவையற்ற ரோமங்களால்   பெண்களுக்கு ஏகப்பட்ட மனக்குழப்பம்  ஏற்படுகிறது . அடுத்தவர்களுக்கு  அசிங்கமாக  தெரியுமே  என்று  நினைத்து கொண்டு  நான்கு பேருக்கு  மத்தியில்   செல்லவே  கவலைப்படுவார்கள் .

அப்படிப்பட்டவர்களுக்கு இந்த   நிவாரணம் அளிக்கும் முறையை  பயன்படுத்தினால் அனாவசியமான ரோமங்களை  அகற்ற  செய்யலாம். ஆனால் அதில் ஒரு  சிக்கல் இருக்கிறது  அது என்னவென்றால்  தொடர்ந்து ‘ ஷேவிங் ‘ செய்ய  வேண்டிய  நிர்பந்தம்  ஏற்படும். ‘ஹேர்  ரீமாவின் ‘ க்ரீம்களும்  முழுமையான  நிவாரணம் தருவதில்லை. இருப்பவைகளில் சிறந்த வழி ‘வாக்சிங்’ செய்வதே. தொடர்ந்து   ‘வாக்சிங்’  செய்தால்பலன் கிடைக்கும். அதுவும் நாம் வீட்டில் இருந்தே  அதை செய்யலாம்.  அதற்கான  வழிமுறை  என்னவென்பதை  தெரிந்து  கொள்ளலாம் .

தேவைப்படும்  பொருட்கள் ;

சர்க்கரை  – 500 கிராம்

எலுமிச்சை சாறு  – 3 பழத்தினுடையது

கிளிசரின்  – 1  1 /2 தேக்கரண்டி

 

செய்முறை  ;

 

எலுமிச்சை பழச்சாற்றில்   சர்க்கரையை  சேர்க்கவும். லேசான சூட்டில்  10  முதல் 15 நிமிடம்   அந்த கலவையை  வைக்கவும். தேன் நிறத்தில்  அது  கெட்டியாகும் பொது கிளிசரின் சேர்த்து  இறக்கவும். இந்த கலவையை முடி உள்ளங்காலில்  சூட்டோடு  தேய்க்கவும். பின்பு நீளமான   காட்டன் துணியால் இறுக்கவும். கலவை  ஆறியதும்  ரோமம்  வளந்திருக்கும்   திசைக்கு   தக்கபடி  துணியை  இழுத்து  எடுங்கள்.

குறிப்பு: பியூட்டி பார்லருக்கு   சென்று ஒன்று  அல்லது  இரண்டு  முறை செய்த பின்பே  சுயமாக   வாக்சிங்  செய்யலாம் .அதுவே   சரியான  முறைப்படி செய்வதாக  இருக்கும் .

முகத்தில்  வளர்ந்துள்ள   மூடியை  அகற்ற  மஞ்சள் பொடி, கடலை மாவு, பன்னீர்  ஆகிய  மூன்றையும்  கூழ் போல கலந்து  முகத்தில்  அழுத்தி தேய்க்க  வேண்டும். அடிக்கடி  இப்படி  செய்வதால் தேவையற்ற   முடி  உதிர்ந்துவிடும் .

Share this post with your friends