அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஒரு இயக்குனரை ஒரு நடிகருக்கு பிடித்து விட்டது என்றால் அவர்களோடு தொடர்ந்து பணியாற்றுவது வழக்கம். அது அவர்கள் இருவருக்குமே ஒரு கம்போர்ட் ஜோன் ஆகவே இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகர்கள் உடன் தொடர்ந்து பணியாற்றிய ஒரு சில இயக்குனர்களை பற்றி காணலாம் :
ஏ ஆர் முருகதாஸ்:
“துப்பாக்கி” படத்தின் மூலம் இவருக்கும் விஜய் அவர்களுக்கும் ஒரு நெடுந்தூர பயணம் உருவானது எனலாம். ஆம், இருவருக்குமே இந்த படம் மாபெரும் திருப்புமுனையை பெற்று தந்தது. இதனால் எப்போது இந்த கூட்டணி இணைந்தாலும் நிச்சயம் ஒரு பிளாக் பஸ்டர் உறுதி என்பதை கூறுவார்கள். அப்படி அமைந்தது தான் கத்தி மற்றும் சர்கார் இந்த இரண்டு படங்களுமே விஜய் வாழ்வில் மிக முக்கிய படங்களாக இன்று வரை பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் நான்காவது முறையாக இணைந்தால் நல்லது என பல தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிறுத்தை சிவா :
“வீரம்” படத்தின் மூலம் சிவாவுக்கும் அஜித்துக்கும் நல்ல நட்பு உருவானது. அது தொடந்து இவர்கள் இணைந்து படங்கள் கொடுக்க காரணமாகவும் அமைந்தது. ஆம், வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம், என சிறுத்தை சிவா உடன் இவர் கூட்டணி அமைத்த படங்கள் தயாரிப்பாளருக்கு லாபத்தை ஏற்படுத்தி தந்தது. அஜித் திரை வாழ்வில் வீரம், விசுவாசம் படங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

அட்லீ :
“தெறி” படத்தின் மூலமாக விஜய்க்கும் இவருக்கும் ஒரு நல்ல பாண்டிங் உருவானது. தெறி தந்த பிளாக் பஸ்டர் வெற்றி மற்றும் நம்பிக்கை விஜய்யை மீண்டும் மீண்டும் இயக்க வாய்ப்பை அள்ளி தந்தது அட்லீக்கு. ஆம், மெர்சல், பிகில் என அடுத்தடுத்து திணறடிக்கும் பிளாக் பஸ்டர் வெற்றி மூலம் விஜய் இதயத்தில் மட்டுமல்ல விஜய் ரசிகர்கள் இதயத்திலும் அடலீக்கு ஒரு சூப்பர் இடம் உள்ளது. இந்த கூட்டணி நான்காவது முறையாக வரும் காலங்களில் இணைய வாய்ப்பு உள்ளது உறுதி.

ஹெச் வினோத்:
“நேர்கொண்ட பார்வை” தந்த இமாலய வெற்றி அஜித்தை மீண்டும் இயக்கும் வாய்ப்பை ஹெச் வினோத் அவர்களுக்கு வழங்கியது. ஆம், வலிமை, துணிவு ஆகிய பிளாக் பஸ்டர் படங்கள் மூலம் இவரும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் உள்ளார். மேலும், அஜித்தின் கேரியர் இல் துணிவு ஒரு மகத்தான படம் என்பதால், இந்த கூட்டணியும் வரும் காலங்களில் இணைய அதிக வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் மேனன் :
“விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் தான் இவர்கள் கூட்டணி முதல் முறை உருவானது, ஆனால் இருவர் வாழ்விலும் மாபெரும் இடத்தை மக்கள் மனதில் பெற்று தந்த படம் இதுவாகும். இதன் தொடர்ச்சியாக அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் இந்த கூட்டணியில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. சிம்புவின் திறனை அழகாய் வெளிக்கொண்டு வந்த இயக்குனர்களில் கெளதம் மேனன் பங்கு அளப்பரியது எனலாம். மீண்டும் வெந்து தணிந்தது காடு பார்ட் 2, விண்ணை தாண்டி வருவாயா பார்ட் 2 படங்கள் மூலம் இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.
