Mnadu News

தொடர் விடுமுறையின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு 26 மணி நேரம்…

கோடை விடுமுறை,புனித வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தொடர் விடுமுறையின் காரணமாக திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டம் காரணமாக பக்தர்கள், தங்கும் விடுதிகள் கிடைக்காமல் திறந்த வெளியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், தயிர்சாதம், குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.பக்தர்கள் கூட்டம் அதிகம் காரணமாக இலவச தரிசனத்திற்கு 26 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள், திருமலை முழுவதும் உள்ள விடுதிகளுக்கு சென்று 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யும்படி கேட்டு கொண்டுள்ளனர்.

ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து பெற்று வந்த பக்தர்கள் தரிசனத்திற்கு 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கின்றனர். ஆதார் அட்டை மூலமாக நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற சர்வ தரிசனம் பக்தர்கள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து சென்று திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு சுமார் 6 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this post with your friends