Mnadu News

தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமத்தைப் பெற்ற அதானி குழுமம்.

நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலத்தில் பங்கேற்றன. சுமார் 40 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையானது 1 கோடியே 50 லட்சத்து 173 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

அதில்,அதானி நிறுவனமானது 26 ஜிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்டவற்றை 212 கோடி ருபாய்க்கு வாங்கியது. 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பொது சேவையில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது.அதோடு. தொலைத்தொடர்பு சேவையில் இல்லாத அதானி நிறுவனம் 5ஜி ஏலத்தில் பங்கேற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தற்போது அதானி குழுமம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை துவங்க அதற்கான உரிமத்தை மத்திய அரசு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் 2-வது பெரிய பணக்காரராக இருக்கும் அதானியின் இந்த தொலைத்தொடர்பு வருகை ஜியோ, ஏர்டெல் நிறுவங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends