Mnadu News

தொழிலதிபர் விமான நிலையத்தில் கைது! குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!

தொழிலதிபர்: 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் 55 வயதான தொழிலதிபர் காஜா மொய்தீன். இந்த நபர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா போன்று பல மாநிலங்களில் தொழில் நடத்தி வந்துள்ளார். 

வழக்கு பதிவும் தலைமறைவும்; 

2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் மற்றும் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசார் காஜா மொய்தீன் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அவரை விசாரிக்க அவரை அணுகிய போது அவர் தலைமறைவு ஆகியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதனால் இவரை தேடப்படும் குற்றவாளியாக இரண்டு காவல் நிலைய போலீசாரும் அறிவித்தனர். 

 கத்தார் பயணம் : 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாராகி கொண்டு இருந்தது. அப்போது, அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து பயணிகளை விமானத்தில் ஏற அனுமதித்துக்கொண்டு இருந்தனர்.

பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனில் சிக்கிய முகம்: 

அப்போது தேடப்படும் குற்றவாளியான தொழிலதிபர் காஜா மொய்தீன் இந்த விமானத்தில் கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களைக் குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த போது இவர் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளி என்றும், இவரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.

அவரின் பயணத்தை ரத்து செய்த அதிககரிகள், அவரை தனி அறையில் பூட்டிய குடியுரிமை அதிகாரிகள் தஞ்சாவூர், ஹைதராபாத் காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்துள்ளனர். 

Share this post with your friends