அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்,அதானி விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பேசியுள்ள நிர்மலா சீதாராமன், தொழில் நிறுவனங்களிடம் இருந்து அரசு விலகியே இருக்கிறது.அதோடு, அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு விசாரித்து வருகிறது.அதுவும், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.எனவே, நீதிமன்ற விசாரணையில் இந்த விவகாரம் இருப்பதால் இது குறித்து பொதுவெளியில் கூறுவது பொருத்தமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More