Mnadu News

தோல்வியில் முடிந்ததா தென்கொரியாவின் ஏவுகணை சோதனை?

தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் நாடு வடகொரியா. குறிப்பாக, அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தும்.

இந்த வருடம் துவங்கி பல வித ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதனால், பல உலக நாடுகளும் கிலியில் உள்ளன.

வடகொரியாவுக்கு பயங்கர பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனையை அரங்கேற்றியது. இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. அதே நேரத்தில், தென்கொரிய ராணுவமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இதில், தென்கொரியா ஏவிய ஒரு ஏவுகணை தோல்வியடைந்தது. அந்த ஏவுகணை வடகொரியாவின் கடற்கரை நகரமான கங்க்னியங் என்ற பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்தது. ஏவுகணை விழுந்து வெடித்ததில் விமானப்படை தளத்தில் தீ பரவி எரிய துவங்கியது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா நடத்திய ஏவுகணை சோதனை வடகொரியாவின் விமானப்படை தளத்திற்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகொரியா மிகப்பெரும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends