குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பரூச்சில் அமைய உள்ள நாட்டின் முதல் மொத்த மருந்துப்பொருள் பூங்காவிற்கும்; அடிக்கல் நாட்டினார். அதன்பின், நிகழ்ச்சியில் பேசிய அவர், பரூச் ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கும் தாயகமாக இருக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன என்றார்.
நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள், அவர்கள் தங்கள் உடைகளை மாற்றியுள்ளனர்.
அவர்கள் நம்முடைய அப்பாவி மற்றும் ஆற்றல் மிக்க இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். நகர்ப்புற நக்சல்கள் மேலிருந்து கால் பதிக்க பார்க்கிறார்கள்.
நம்முடைய இளம் தலைமுறையை அழிக்க விடமாட்டோம். நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக நமது குழந்தைகளை எச்சரிக்க வேண்டும்.
அவர்கள் அந்நிய சக்திகளின் முகவர்கள். அவர்களுக்கு எதிராக குஜராத் ஒருபோதும் தலை குனியாது, குஜராத் அவர்களை அழித்துவிடும் என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More