Mnadu News

நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து.

ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 80- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் , “அமிதாப் பச்சன் ஜிக்கு 80-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைமுறை தலைமுறையாக ரசிகர்களை மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளில் ஒருவர் இவர். நீண்ட நாள் நல்ல உடல் நலத்துடன் நீங்கள் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்கிறேன்” இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

Share this post with your friends