மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.
சென்னை, சிறுநீரகம் செயலிழப்பால் நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.