ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது ‘ஆதிபுருஷ்’. இந்தப் படத்தின் வசனம், கதாபாத்திர சித்தரிப்பு மற்றும் மோசமான கிராபிக்ஸ் காட்சிகளால் படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, “மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு படத்தை எடுக்கும்போது அந்த இயக்குநர் மிகவும் சென்சிட்டிவாகவும், பொறுப்புடனும் படத்தை அணுக வேண்டும்.உங்களின் நம்பிக்கை என்னுடைய நம்பிக்கையிலிருந்து வேறுபடலாம். ஒரு தாய் உலகிலேயே தன் குழந்தைதான் அழகான குழந்தை என நம்பினால் அங்கே சென்று அதை தவறு என நான் நிரூபிக்க எனக்கு உரிமையில்லை. காரணம், அது அந்தத் தாயின் அன்பும் நம்பிக்கையும். அன்பும், நம்பிக்கையும் கொண்ட ஒரு விஷயத்தில் நீங்கள் லாஜிக் பார்க்க முடியாது. அப்படியான நம்பிக்கைகளையும், ஒருவரின் உணர்வுகளையும் புண்படுத்துவது பாவமாகும்” என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More