இங்கிலாந்தை சேர்ந்தவர் 33 வயதாகும் லூசி லெட்பி. இவர் செஸ்டர் பகுதியில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் நர்சாக இவர் பணியாற்றி வந்துள்ளார். ஒரு நர்ஸ் எப்படி இருக்க வேண்டுமோ அவர் அதற்கு நேர் மாறாக நடந்துள்ளார். ஆம், 2015 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மருத்துவமனையில் வேலை செய்து வந்த லூசி லெட்பி, சுமார் 7 குழந்தைகளை இறக்கமே இன்றி கொடூரமாக கொலை செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், பச்சிளம் குழந்தை ஒன்றை கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாணியில் இருந்த மருதுவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சந்தேகம் வலுக்கவே அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

புகாரை பெற்ற போலீசார் லூசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குலை நடுங்க வைக்கும் தகவல்கள் வெளியாகின. போலீசாரின் விசாரணையில் “குழந்தைகளின் கைகளில் காற்றை ஏற்றி கொலை செய்வது, இன்சுலின் செலுத்தி கொல்வது , டிவினஸ் குழந்தைகளை கொல்வது என பற்பல வகைகளாக பிரித்து கொலை சம்பவங்களை அரங்கேற்றி உள்ளார் நர்ஸ் லெட்பி.

இந்த நிலையில் கைதான நர்ஸ்சின் இல்லத்தில் சோதனை செய்தபோது போலீசாருக்கு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. மேலும், அதையும் ஆதாரமாக கொண்டு அதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் லெட்பி மறுத்துள்ளார். மேலும், தான் எதையுமே செய்யவில்லை என கூசாமல் பொய் கூறி உள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, லெட்பி பணியில் இருக்கும் சமயங்களில் தான் மரணங்கள் அதிகரித்தன என வாதம் செய்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நர்ஸ் லெட்பி குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளார். இந்நிலையில் நர்ஸ் லூசி லெட்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி க்ரோஸ் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
