Mnadu News

நவம்பர் 8 இல் முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்.

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. முழு சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழலின் இருண்ட பகுதி அல்லது குடைக்குள் முழு சந்திரனும் விழும் ஒரு நிகழ்வாகும்.
ஒரு கிரகண காலம் என்பது தோராயமாக 35 நாள்கள் ஆகும், இதில் குறைந்தது இரண்டு கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில், ஒரு கிரகண காலத்தில் மூன்று கிரகணங்களும் நிகழக் கூடும்.
இந்நிலையில், இந்த ஆண்டின் சந்திர கிரகணம் வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நிகழவுள்ளது. முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ஒரு ரத்த நிலவாக இருக்கும், முழு நிலவும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுகிறது, இது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது, இதன் விளைவாக சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். இந்த முழு சந்திர கிரகணத்தை கொல்கத்தா உள்பட நாட்டின் கிழக்கு பகுதிகளில் காண முடியும்.
எஞ்சிய பகுதிகளில், பகுதி சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடையும். முழு சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பலான பகுதிகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் காண முடியும்
இந்த முழு சந்திர கிரகணம் இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் அகும். அடுத்த முழு சந்திர கிரகணம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி காண முடியும்.

Share this post with your friends