Mnadu News

நவராத்தியின் எட்டாவது நாள்: மகா கவுரியை வணங்கும் முறைகள்

இந்தியாவில் மிக விமர்சையாக கொண்டாட படும் விழாக்களில் ஒன்றான நவராத்திரியின் எட்டாவது நாள் இன்று. ஒன்பது பெண்களின் ரூபங்களில் தன்னை வெளிக் காட்டி அருள் புரிகிறாள் துர்கா தேவி. மஹேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பல வகை உருவங்கள் உள்ளன.

தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரிகளில் அஷ்டமி மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் மா துர்காவின் ஒன்பது அவதாரங்களான ஷைலாபுத்ரி, பிரம்மச்சாரினி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, கத்யாயினி, கல்ராத்திரி, மகா கவுரி மற்றும் சித்திதத்ரி ஆகிய ஒன்பது வெவ்வேறு வடிவங்களில் வைத்து வழிபாடு செய்யப்படும்.

எட்டாம் நாளான இன்று மக கவுரி, காளை மீது அமர்ந்து அருள்புரியும். பக்தர்களின் அனைத்து விதமான தடைகளையும் அகற்ற கவுரி அவதாரத்தில் வரும் துர்கையை அலங்கரித்து வழிபடுவர்.

துர்கா தேவியின் அவதாரங்களில் மகா கவுரி அவதாரம் அழகான வசீகரிக்கும் தோற்றமாகும். நான்கு கைகளைக் கொண்ட மகா கவுரியின் வலதுபுற ஒரு கையில் திரிசூலமும், மற்றொரு கையில் அபயமுத்திரையும், இடது கை ஒன்றில் தாமரை மலரும், மற்றொரு கையில் உடுக்கை மேளமும் கொண்டுள்ளாள். வெள்ளை ஆடைகளை அணிந்து ஒரு காளையின் மீது அமர்ந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் மகா கவுரி.

நவராத்தியின் எட்டாவது நாளின் மயில் பச்சை நிறம் அணிந்து மகா கவுரிக்கு பூஜை செய்து வழிப்பட்டால் ஆசைகள் நிறைவேறும். பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் போன்றவை படைத்தது வழிபட வேண்டும். மகாகவுரிக்கு மஞ்சள் மற்றும் வெள்ளை பூக்களை தூவி வணங்க வேண்டும். இளம்பெண்களை அழைத்து வீட்டில் உணவு அளித்து, பரிசுகள் வழங்குவது மேலும் சிறப்பாகும்.

Share this post with your friends