ஒன்பது நாள் திருவிழாவான நவராத்திரி இந்துக்களால் மிக விமர்சையானா பண்டிகைகளில் ஒன்றாகும். நவராத்திரி ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது. சைத்ரா நவராத்திரி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.
மறுபுறம், சரத் நவராத்திரி செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. சரத் நவராத்திரியில், பக்தர்கள் நவதுர்கா எனப்படும் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை வழிபடுகின்றனர்.
செப்டம்பர் 27 நவராத்திரியின் இரண்டாவது நாளன்று, நவதுர்காவின் இரண்டாவது வடிவமான மா பிரம்மச்சாரிணி வழிபடப்படுகிறது. அவள் வெள்ளை ஆடைகளில் அமைதியான மற்றும் இனிமையான தோற்றத்தை அலங்கரிக்கிறாள். அம்மனை, ஒரு கையில் ஜபமாலை (மணிகளின் சரம்) மற்றும் மற்றொரு கையில் ஒரு பாரம்பரிய தண்ணீர் பானையான கமண்டலை வைத்திருக்கிறாள். இந்து சாஸ்திரங்களின்படி, பிரம்மச்சாரிணி தேவி சிவபெருமானை சாந்தப்படுத்துவதற்காக தவம் செய்தார்.
இரண்டாவது நாளான நவராத்தியின் நிறம் சிவப்பு, இது அன்பையும், வெக்கையையும் குறிக்கும். பக்தர்கள் சிவபெருமானுடன் பிரம்மச்சாரிணி மாதாவை வழிபட்டு விரதம் இருப்பார்கள். அம்மனுக்கு கலசத்தில் மல்லிகைப் பூ, அரிசி, சந்தனம் சமர்பிக்கப்படுகிறது.
மேலும் தெய்வத்திற்கு பால், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றுடன் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆரத்தி செய்யப்படுகிறது, மேலும் பிரசாதங்கள் வைத்து வழிபடுவர். நவராத்திரியின் போது அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் வைத்து வழங்குவது மேலும் சிறப்பாகும்.