Mnadu News

நாகையில் கடற்படை அதிகாரிகள் விசாரணை.

கடந்த 15 ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேர் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அவர்கள், கடந்த 21ஆம் தேதி மன்னார்வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினர்.
இதில், மயிலாடுதுறை மாவட்டம், வானகிரியைச் சேர்ந்த மீனவர் வீரவேல் பலத்தக் காயமடைந்தார். அவர், மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காயங்களுடன் தப்பிய மற்ற 9 மீனவர்களும், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து, நாகையில் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Share this post with your friends