தெலுங்கானாவில், முதல் அமைச்சர்; சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் சந்திர சேகர ராவ், பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி வந்தார்.,இந்த நிலையில் மஹாராஷ்டிர அரசியலிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அங்கு பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளார் சந்திரசேகர ராவ். மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் நடந்த நிகழ்ச்சியில் மற்ற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், சந்திரசேகர ராவ் முன்னிலையில், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் இணைந்தனர்.இது தொடர்பாக பேசியுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,தெலுங்கானா முதல் அமைச்சர்; சந்திரசேகர ராவ் வருகையால் மஹராஷ்டிர அரசியலில் எந்த தாக்கமும் இருக்கப்போவதில்லை.அவர் இதுபோன்ற நாடகமாடினால், தெலுங்கானாவிலும் தோற்க நேரிடும். தோல்வி பயத்தால் அவர் மஹாராஷ்டிரா வந்துள்ளார் என்று பேசியுள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More