Mnadu News

நாடாளுமன்றத்தில் அன்புமணியின் பங்களிப்பு சொல்ற அளவுக்கு இல்லை

திமுக கூட்டணியில் போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். மக்களவையில் எம்பிக்களின் செயல்பாடு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அன்புமணியின் வருகைப்பதிவேடு வெறும் 50 சதவிகிதத்திற்கு குறைவாகத் தான் இருக்கிறது.

அப்படியே மக்களவைக்கு வந்தாலும் அவரது செயல்பாடு மிக மோசமாகவே கருதப்படுகிறது. முக்கியமான விவாதங்களிலும் ஓட்டுப்பதிவு நடக்கும் நேரங்களிலும் தமிழகத்திலேயே நேரத்தைக் கழித்துள்ளார் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ்.

ஏற்கனவே திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களின் ஏகோபித்த கோபத்தைப் பெற்ற அன்புமணி ராமதாசுக்கு இந்த செய்தி மேலும் தேர்தல் அரசியலில் பின்னடைவைத் தருவதாகவே இருக்கிறது.

Share this post with your friends