Mnadu News

நாடாளுமன்றம் தாக்குதல் தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

கடந்த 2001-ம் ஆண்டு பலத்த பாதுகாப்பையும் தாண்டி இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு காரில் 9 பயங்கரவாதிகள் வந்து தாக்குதல் நடத்த தொடங்கினர். அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டபோது பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர், அவர்கள் சதியை முறியடித்தனர்.

பயங்கரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையிலான சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாதுகாப்புப்படையினர், டெல்லி போலீசார் என 14 பேர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டபோது எம்.பி.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்றத்திற்குள் இருந்தனர்.

நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டு இன்றோடு 22 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வீரமரணம் அடைந்த பாதுகாப்புப்படையினர் படங்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் ஆகியோர் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினர்.

Share this post with your friends