Mnadu News

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்படவில்லை. மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் திமுகவும், திருச்சியில் மதிமுகவும் போட்டியிடுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More