Mnadu News

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு; டி.ஆர்.பாலு கண்டனம்

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர் என டி.ஆர்.பாலு கூறினார்.

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் முழக்கங்களை எழுப்பினர்.

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதேபோல, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதையடுத்து தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கொடுத்த நோட்டீஸை காற்றில் பறக்கவிட்டனர் என்று கடுமையாக சாடினார்.

Share this post with your friends