Mnadu News

நாடு முழுவதும் நடந்த சிபிஐ சோதனையில் ரொக்கம்,தங்கம் பறிமுதல் .

நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், “ஆபரேஷன் சக்ரா” என சிபிஐ நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்.பி.ஐ. கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக நாட்டின் 105 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 300-க்கும் மேற்பட்ட நபர்களை கண்காணித்து வருவதாகவும், ராஜஸ்தானில் ஒரு இடத்தில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share this post with your friends