Mnadu News

நானே வருவேன் ஜுக்பாக்ஸ் வெளியீடு!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படம் என்றாலே அதற்கு தனி வரவேற்பு உண்டு எனலாம். பல வருடங்களுக்கு பிறகு இதே கூட்டணி இணைந்து உருவாக்கி உள்ள படம் தான்
“நானே வருவேன்”. கலைப்புலி தாணு பிரம்மாண்ட தயாரிப்பில் இப்படம் உருவானது.

இதில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் நடித்து உள்ளனர். இயக்குனர் செல்வாவின் ஆஸ்தான கம்போசர் யுவன் தான் இந்த படத்துக்கும் இசை அமைத்து இருந்தார்.
நானே வருவேன் சென்ற மாத இறுதியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தயாரிப்பாளர் தாணுவுக்கு பட்ஜெட்டை தாண்டிய கலெக்சன் ஐ அள்ளி கொடுத்தது. சுமார் 20 கோடிகள் வரை திரை அரங்க வசூல் எனவும் தகவல் வெளியானது.

செல்வா யுவன் கூட்டணி என்றால் அதில் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு என்று தனி ரசிகர் படை உண்டு. அவர்களை மகழ்விக்க படக்குழு தற்போது அனைத்து பாடல்களையும் வெளியிட்டு உள்ளது.

லிங்க் : https://youtu.be/DGx2z-Y0i4g

Share this post with your friends