செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் என்றாலே அந்த படத்தில் நிச்சயம் நல்ல நடிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பு ஒளிந்திருக்கும் எனலாம். அப்படி இவர்கள் கூட்டணியில் பல வருடங்களுக்கு பிறகு உருவாகி உள்ள படம் “நானே வருவேன்”.
தனுஷ் உடன் இணைந்து இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் நடித்து உள்ளனர். இயக்குனர் செல்வாவின் ஆஸ்தான கம்போசர் யுவன் தான் இந்த படத்துக்கும் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் “பிஞ்சு பிஞ்சு” ஒரு பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே, இப்படத்தின் வீரா சூரா, ரெண்டு ராஜா ஆகிய பாடல்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது குறிப்பிடதக்கது.
பாடல் லிங்க் : https://youtu.be/P94TkdcgCho