தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில், நாய் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து அருகில் இருந்த வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பரிதாபமாக அந்த நாய் 4 நாட்களாக சாக்கடையில் சிக்கி கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று நாயை பத்திரமாக மீட்டனர். மேலும், பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடை மூடப்படாமல் திறந்த வெளியில் இருப்பதால் அடிக்கடி இவ்வாறு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.