டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக 11ஆயிரம் ரன்களை கடந்தவர் ஆலன் பார்டர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலன் 2016 முதல் பார்கின்ஸன் எனப்படும் நடுக்குவாதம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார். 7 வருடமாக பொதுமக்கள் கண்களில் படாமல் வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில், இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் போட்டி முடிந்தவுடன் இந்த செய்தி வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பலரும் இதற்காக ஆறுதல் கூறிவருகின்றனர்.நோய் குறித்து பேசியுள்ள ஆலன் பார்டர்,நான் எப்போதும் இன்ட்ரோவர்ட்டான மனிதன். மனிதர்கள் எனக்காக கவலைப் படுவதை நான் விரும்பவில்லை. நான் இந்த நோய் பாதிப்பை தெரிந்ததும் பயப்படவில்லை. தற்போது 68 ஆகிறது. 80 வயதினை எட்டினால் அதிசயம். அதுவரை உயிரோடு இருப்பது அதிசயமென மருத்துவர்களும் கூறியுள்ளார்கள். என்னால் இன்னொரு சதத்தினை அடிக்க முடியாது.என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More