Mnadu News

நாமக்கல் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று முன்தினம் ஏற்காடு வனப்பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படும் காட்டெருமை ஒன்று வழி தவறி பிரதான சாலையில் சுற்றி திரிந்தது. இதனை அடுத்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

நாமக்கல், சேலம்,ஈரோடு ஆகிய மூன்று வனத்துறையினர் வனத்துறை, குமாரபாளையம் பள்ளிபாளையம் போலீசார் உள்ளிட்ட மூன்று வனத்துறை நிர்வாகம் சார்பில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று முழுவதும் காட்டெருமையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மாலை 6 மணி அளவில் குமாரபாளையம் பகுதியில் இருந்து பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதியான ஆவத்திப்பாளையம் பருவக்காடு என்ற பகுதியில் பழனிசாமி விவசாயின் கரும்பு தோட்டத்தில் புகுந்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் காட்டெருமையை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபட்டனர். மூன்று மயக்க ஊசிகள் போடப்பட்டு காட்டெருமை மயக்கம் அடைய செய்யப்பட்டது. அதன் பிறகு பத்திரமாக இன்று அதிகாலை 4:00 மணியளவில் காட்டெருமை டாட்டா ஏசி வாகனத்தில் குமாரபாளையம் பவானி வழியாக அந்தியூர் அடர்ந்த வனப்பகுதி விடப்பட்டது. இரண்டு நாட்களாக பள்ளிபாளையம் குமாரபாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய காட்டெருமையை வனத்துறையினர் பிடித்துச் சென்றது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது..

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More