வைகை புயல் வடிவேலு என்ற பெயரை மனக் கவலையை போக்கும் மந்திரப் பெயர். சில வருடங்களாக பல பிரச்சினைகளை சந்தித்து வந்த அவர். தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு பக்கம் சோலோ ஹீரோ, இன்னொரு பக்கம் குணச்சித்திர ரோல் என அனைத்திலும் புகுந்து அடித்து வருகிறார். மாமன்னன், சந்திரமுகி 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
தற்போது நாய் சேகர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசை உரிமையை திங்க் இசை நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட படக்குழு விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என உறுதி செய்துள்ளது.
லிங்க் : https://youtu.be/oYQhnE0gCA0