தெலுங்கு திரை உலகில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருபவர் நிகில் சித்தார்த்தா. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் “ஸ்பை”. இப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்று பல மொழிகளிலும் ரிலீஸானது.
கேரி.பி.ஹெச் இயக்கத்தில் த்ரில்லர் வகை படமாக வெளிவந்து உள்ளது. இதில் முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா மேனன், சன்யா தாகூர், அபினவ் கோமதம், ஆர்யன் ராஜேஷ், மகரந்த் தேஷ்பாண்டே, சச்சின் கெடேகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், கெஸ்ட் ரோலில் “பாகுபலி” புகழ் ராணா டகுபதி நடித்துள்ளார். இதனை ‘ED எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்துக்காக நடிகர் நிகில் சித்தார்த்தா ₹8 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.