Mnadu News

“நிதியை விடுவியுங்கள்” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.15 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளதாகக் கூறிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிதியை விடுவிக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியை காலி செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக கூறிய அவர், பழங்குடியினருக்கு எஸ்டி சான்றிதழ், சுத்தமான குடிநீர் மற்றும் சமூகத் திட்டங்களுக்கான அணுகல் தொடர்பான அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யப்படும்.

பழங்குடியின மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this post with your friends