விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆர் எஸ் பிள்ளை வீதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கோவையில் திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில் உட்பட சென்னையைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கானது பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இன்று இஸ்மாயில் வீட்டில் திண்டிவனம் ஏ எஸ் பி அபிஷேக் குப்தா தலைமையான போலீசார் சுமார் அரை மணி நேரமாக சோதனை செய்தனர். மேலும் இஸ்மாயில் மீது ஏற்கனவே தேசிய புலனாய்வு போலீசார் சம்பந்தமாக வழக்கு உள்ளதால் சோதனை நடைபெற்றது எனவும் இதில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More