பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பாக பேசியுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் அமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லர், ‘ஒரு நிலையற்ற பாகிஸ்தான் என்பது நமக்கு ஆபத்தானது. நமது துணை கண்டத்தில் உள்ள நாடு அமைதியுடன் கூடிய நிலையானதாக இருக்க வேண்டும். அந்த நாடு நல்லபடியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நமது அண்டை நாட்டினருக்கு சிறப்பான மற்றும் அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More