Mnadu News

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் 499 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு வரும் 7-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி,http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 011-40759000 என்ற எண்ணிலோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends