மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020 ஆம ஆண்டு; தாக்கல் செய்த ரிட் மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More