நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தொடர்ந்து பொய் கூறி வருகிறது என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி வெயியிட்டுள்ள செய்தியில், நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தொடர்ந்து பொய்கூறி வருகிறது. அவர்கள் சிசோடியா 14 தொலைபேசிகளை அழித்ததாக கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர் எந்த ஒரு தொலைபேசியையும் அழிக்கவில்லை. உண்மையில், அந்த 14 தொலைபேசிகளில் 5 தொலைபேசிகள் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வசமே உள்ளது. அதேபோல அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் சிசோடியாவின் வீட்டில் வேலை செய்பவர்கள், அவரது ஓட்டுநர் மற்றும் பணியாட்களின் எண்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் விசாரணை என்ற பெயரில் கேலிக்கூத்து நடத்துகின்றனர். பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத் துறை ஒரு சிறந்த கல்வி அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் மணீஷ் சிசோடியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More