பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13ஆயிரம் ரூபாய் கோடி கடன் மோசடி செய்த 51 வயதாகும் நீரவ் மோடி, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவர், அந்நாட்டுத் தலைநகர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வைர வியாபாரி நீரவ் மோடியை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இந்தியாவில் நீரவ் மோடிக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்பிலான 39 சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More