நீரிழிவு இருப்பவர்கள் உடலில் குளுக்கோஸ் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள குறிப்பிட்ட பழங்களை சாப்பிடாமல் இருப்பது மிக நல்லது. மாம்பழம், பலாப்பழம்,வாழைப்பழம்,சப்போட்டா, திராச்சை, அண்ணாச்சி,உலர்ந்த திராச்சை போன்ற பழங்களை உட்கொள்வதை தவிர்க்கலாம்.
சராசரியாக இந்தியாவில் 50 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்க பட்டுள்ளனர் என்பது ஒரு ஆய்வின் தகவல். பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், சில பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை நிரம்பியுள்ளது.எனவே நீரிழிவு நோயாளிகள் அதாவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடலில் குளுக்கோஸ் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள குறிப்பிட்ட பழங்களை சாப்பிடாமல் இருப்பது மிக நல்லது.
உங்கள் உடல் சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டுமானால் சில பழங்களை தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயாளி சாப்பிட வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய பழங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.
தினசரி சில பழங்களை உட்கொள்வது உண்மையில் நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் என்று கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளியின் நுகர்வுக்கு பாதுகாப்பாக இருக்க ஜி.ஐ 55 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பழங்களை தவிர்க்க வேண்டிய பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்
ஒவ்வொரு 100 கிராம் மாம்பழத்திலும் சுமார் 14 கிராம் சர்க்கரை உள்ளது. இது இரத்த சர்க்கரை சமநிலையை பாதிக்கும்.. ‘பழங்களின் கிங்’ மற்றும் முக்கனியில் முதன்மை பழமாக இருக்கக்கூடிய உலகின் மிக சுவையான பழங்களில் ஒன்று மாம்பழம் என்றாலும், சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை இது அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
சப்போட்டா
சப்போட்டா பழத்தில் அதிகளவு சர்க்கரை நிறைந்துள்ளது. மிகவும் இனிப்பான பழம் இது. ஒவ்வொரு 100 கிராம் கொண்ட ஒரு சப்போட்டா பழத்தில் 7 கிராம் சர்க்கரை உள்ளது. பழத்தின் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு (ஜி.ஐ) (Glycemic Index) அதிகமாக உள்ளது. அத்துடன் அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் ஆகியவை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சப்போட்டா பழம் மிகவும் தீங்கு விளைவிக்கும்.
திராட்சை
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் திராட்சை பழத்தில் நிறைந்திருக்கிறது. ஊட்டச்சத்துகள் பல நிறைந்திருந்தாலும், திராட்சையில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. 85 கிராம் திராட்சையில் 15 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் இருக்கக்கூடும் என்பதால் திராட்சைகளை ஒருபோதும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
சீத்தாப்பழம்
வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாக இருக்கிறது சீத்தாப்பழம். இருப்பினும், நீரிழிவு நோயாளிக்கு சீத்தாப்பழம் நல்லதல்ல. சுமார் 100 கிராம் கொண்ட ஒரு சிறிய பழத்தில் 23 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது. சில ஆய்வு முடிவுகள் நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம், ஆனால், அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
உலர்ந்த கொடிமுந்திரி
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முதன்மை பழங்களில் உலர்ந்த கொடிமுந்தரியும் ஒன்றாகும். 103 இன் ஜி.ஐ மதிப்புடன், நான்கில் ஒரு கப் பரிமாறலில் உலர்ந்த கொடிமுந்தரியில் 24 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பப்பாளி
பப்பாளியில் 59இன் ஜி.ஐ மதிப்பு கொண்ட பப்பாளியில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆதலால், பப்பாளி பழத்தை சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்தால், அது இரத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஆதலால், சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்.
அன்னாசிப்பழம்
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகையில் அன்னாசிப்பழத்தை உட்கொள்வது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியாக நீங்கள் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆதலால், அன்னாசிப்பழம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
வாழைப்பழம்
இயற்கையாகவே ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 15 கிராம் சர்க்கரை இருக்கும்.
மேற்கண்ட பழங்களை சர்க்கரை நோயாளி தவிர்க்க வேண்டும். மேலும் குறிப்பாக உங்களது உணவு வேளைக்கு பிறகு சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பழச்சாறுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குளுக்கோஸ் கூர்முனைகளை ஏற்படுத்தும். இந்த பழச்சாறுகளில் எந்த நார்ச்சத்தும் இல்லாததால், சாறு விரைவாக வளர்சிதை மாற்றப்பட்டு சில நிமிடங்களில் இரத்த சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது. நீரிழிவு நோய் மாத்திரைகளை கவனித்து உட்கொள்ளும் நீங்கள் உளவு பழக்கவழக்கம் அனைத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.