Mnadu News

நீலகிரியில் தோல்வியை ஒப்புக் கொண்ட அதிமுக… நிர்வாகிகள் புலம்பல்

திமுக 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிரபராதி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஆ. ராசா நீலகிரி (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

1996ல் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆ.ராஜா இரண்டு தேர்தலைத் தவிர மற்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். அதில் கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 10 சதவீத  வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியிருக்கிறார். அதுவும் 2ஜி வழக்கின் பிரதிபலனாகத் தான் அந்த தோல்வி இருந்திருக்கிறது.

திமுகவின் வலுவான வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் ஆ,ராசாவை எதிர்த்து வலுவான போட்டியாளரை அதிமுக நிறுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் மக்களுக்கு அறிமுகம் இல்லாத அவினாசி தியாகராஜனை போட்டியாளராக அதிமுக அறிமுகப் படுத்தியுள்ளார்கள் என்று சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே குறை கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

தோல்வியை சந்திப்போம் என அதிமுக கட்சி ஒப்புக் கொண்டதாகவே இந்த வேட்பாளர் அறிவிப்பு இருக்கிறது என புலம்ப ஆரம்பித்துள்ளனர் நீலகிரி அதிமுக தொண்டர்கள்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More