நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. அதில் சிறிய குட்டி ஆடு 3000 ரூபாய் முதல் பெரிய ஆடு 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடை வியாபரிகள் கால்நடை சந்தையில் குவிந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய்க்கு விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மேலப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளிலும் நாட்டுக்கோழி, வாத்து உள்ளிட்ட விற்பனையும் அமோகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More