Mnadu News

நெல்லையில் துணிகர கொள்ளை! பிடிபட்ட குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலம்! 

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த தம்பதி டேனியல் சேகர்- ஷகிலா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஷகிலா அவரது மகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 

மர்ம நபர்கள் கைவரிசை: 

கடந்த மார்ச் மாதம் இரவு இருவரும் வீட்டை பூட்டி விட்டு உறங்கி உள்ளனர். இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து ஷகிலாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி 30  பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி உள்ளனர். இதுகுறித்து ஷகிலா அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து முகமூடி கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் ஆசிரியை ஷகிலா வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் மர்ம நபர்கள் உள்ளே வந்து கொள்ளையடித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது. 

திட்டமிட்ட திருட்டு: 

போலீசாரின் விசாரணையில், ஆசிரியை ஷகிலா வீட்டில் மகளோடு வசித்து வந்ததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து, சிசிடிவி கேமராக்களின் திசையை மாற்றி கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும், காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் காவல்கிணறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் சுற்றி வந்துள்ளார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்  நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரியைச் சேர்ந்த சங்கரசுப்பு என்பதும், வடக்கன்குளம் ஆசிரியை வீட்டில் நிகழ்ந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளில் இவனும் ஒருவன் என்பது தெரிய வந்தது. 

கைதான பலர் : 

ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக சூரியா, முத்துராமன், ராஜதுரை, நயினார் ஆகியோரை பழனி போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.  அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் துணிகர திருட்டில் ஈடுபட்ட சம்பவம் நெல்லையில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

Share this post with your friends