திருநெல்வேலி;
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி மையத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நெல் மற்றும் மண்வளத்தை பாதுகாப்பது பற்றி கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார். இதில் மக்கள் மறந்து போன நெல்மணிகள், கீரை வகைகள், தானிய வகைகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது மேலும் மண்ணை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று விளக்கங்களும் நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து சென்றனர்.