Mnadu News

நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் பேரவை செயலர் பதில் மனு.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நேரடி ஒளிபரப்பு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வில் கிடைத்துள்ள அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து தமிழக சட்டப்பேரவையின் நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Share this post with your friends